ஜிகாதிகளால் துடிதுடித்து கொல்லப்பட்ட தி.மு.க தொண்டர் கண்ணுதலின் 30-வது நினைவு நாளில் ஒரு பார்வை!
திமுக கட்சியில் உறுப்பினராக இருந்து வந்தாலும் இந்துக்களுக்காக மிகத்தீவிரமாக குரல் கொடுத்த வந்த ஒரே காரணத்துக்காக கண்ணுதலை படுகொலை செய்தது ஜிகாதிகள். அவரது 30வது நினைவு நாளில் அவரை பற்றி காண்போம்.
தி.மு.க கட்சியில் உறுப்பினராக இருந்து வந்தாலும் இந்துக்களுக்காக மிகத்தீவிரமாக குரல் கொடுத்த வந்த ஒரே காரணத்துக்காக கண்ணுதலை படுகொலை செய்தது ஜிகாதிகள். அவரது 30-வது நினைவு நாளில் அவரை பற்றி தெர்ந்துக் கொள்வோம்.
இந்த கட்டுரை முகநூலில் ஓமம்புலியூர் ஜெயராமன் என்பவர் எழுதிய பதிவின் மறுபதிப்பு. அந்த பதிவு பின்வருமாறு:
"தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகாவில் அமைந்திருப்து வடசேரி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த பஞ்சாட்சர , பார்வதி அம்மாள் என்ற தம்பதிக்கு 5 மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் ஆவார். அதில் மூத்தவராக பிறந்தவர்தான் கண்ணுதல். இவர் 06.02.1945-ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய தந்தை பட்டானி கடையை சென்னை, மயிலாப்பூர் பஜார் வீதியில் நடத்தி வந்தார்.
அவரது தந்தை நடத்தி வந்த பட்டாணி கடையை கண்ணுதல் தொடர்ந்து நடத்தி வந்தார். அப்போது இந்துக்களுக்காக தீவிரமாக குரல் கொடுத்து வந்துள்ளார். சராசரி உயரத்தை விட சற்று குட்டையாகவும் ஒல்லியான தோற்றத்தையும் கொண்டவர். ஆனாலும் நெஞ்சில் வீரத்தையும், தெளிந்த சிந்தனையும், நினைத்ததை நடத்தி காட்டும் போர் குணம் கொண்டவராக விளங்கினார். மேலும் கண்ணுதலுடன் பிறந்தவர்கள் திருவேங்கடம், கருப்பு என்கின்ற சுப்ரமணியன், குட்டி என்கின்ற கடைசி தம்பி எஸ்.ஜனநாதன், இவர் ஒரு சினிமா இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவரது இயற்பெயர் பழனி. கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் எஸ்.ஜனநாதன் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே அண்ணாதுரை ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழகத்தில் லாட்டரி டிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது முதன் முதலாக கண்ணுதல் கடந்த 04.11.1968ம் ஆண்டு லாட்டரி சீட் ஒன்றை வாங்கியுள்ளார். அதில் ஒரு லட்சம் ரூபாய் பரிசு விழுந்துள்ளது. இதன் பின்னர் அவர் காந்திமதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தனது தஞ்சையை சேர்ந்த பாலு என்பவர் சென்னை மாவட்ட திமுக செயலாளராக இருந்துள்ளார். ஆனாலும் அதனை வைத்து எந்த ஒரு முக்கியத்துவத்தையும் தேடிக்கொள்ளவில்லை கண்ணுதல். இருந்தபோதிலும் தீவிரமாக திமுகவில் பணியாற்றி வந்தார். அப்போது மயிலாப்பூர் கச்சேரி சாலையில் மசூதி ஒன்று சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இதனை கேள்விப்பட்ட கண்ணுதல் மிகவும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தார். அந்த நேரத்தில் கீத்து கொட்டாயில்தான் மசூதி செயல்பட்டு வந்தது.