19 மாணவர்கள் கவலைக்கிடம்.. பொறுப்பில்லாத அன்பில் மகேஷ்.. இந்து முன்னணி குற்றச்சாட்டு!
பொள்ளாச்சி அருகே கோட்டூரில் சத்துணவு சாப்பிட்ட, 19 மாணவர்கள் வயிற்று வலி ஏற்பட்டு, வாந்தி எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஒரு செய்தி தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் பேச்சு பொருளையும் விவாதத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக ஆளும் திமுக அரசு தங்களுடைய கல்வி துறையை இந்த மாதிரியான ஒரு அவல நிலையில் தான் கொண்டு சேர்க்கிறது என்று பல்வேறு தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, 433 மாணவர்கள் படிக்கின்றனர். அதில், 260 மாணவர்கள் மதிய சத்துணவு சாப்பிடுகின்றனர். நேற்று முன்தினம் வழக்கம் போல், சாதம், சாம்பார், முட்டை, கீரை உள்ளிட்ட உணவுகள், மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. சத்துணவு சாப்பிட்ட மாணவர்களில், 19 பேருக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டு, வாந்தி எடுத்துள்ளனர். அதுமட்டுமல்லாது பள்ளியின் முழு கட்டிடமும் பாழடைந்து மாணவர்களின் வெளிப்புற சுகாதாரத்தை பாதிக்கும் வண்ணம் தான் அமைந்திருக்கிறது.
அடச்சீ பள்ளிக்கூடம் இப்டி இருந்தா விளங்கிடும், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அரசு பள்ளிகள் இருப்பது மேலும் அத்தகைய பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பலரும் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வைப்பது தான் தமிழக அரசின் கல்வி தரும் லட்சணமா? என்று தொடர்பான இந்து முன்னணி சார்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து தன்னுடைய அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றும் வெளியிட்டு இருக்கிறார்கள்.
Input & Image courtesy: News