ரத்தத்தில் ஓவியமா? அமைச்சர் கூறியது என்ன?

தமிழகத்தில் ரத்தத்தால் ஓவியம் வரைவதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

Update: 2022-12-30 01:56 GMT

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறுகையில், இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் ஒரு புதிய கலாச்சாரம் ஒன்று தலைதூக்க ஆரம்பித்து இருக்கிறது. அதாவது ரத்தத்தை எடுத்து ஓவியம் வரைந்து விரும்புவர்களுக்கு அனுப்புவது, குறிப்பாக காதலன், காதலிக்கு அனுப்புவது போன்ற பழக்கம் புதிதாக வந்து கொண்டிருக்கிறது. அதை ஒரு தொழிலாகவே தற்போது செய்து வருகிறார்கள். அது முற்றிலும் தடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ரத்த தானம் என்பது பல உயிர்களை காக்க பயன்படுத்தப்படுகிறது. எனவே அந்த ரத்தத்தை வைத்து ஓவியம் வரைவது சரியான முறை அல்ல. உடலில் இருந்து ரத்தத்தை எடுக்கும் பொழுது மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அதற்கு தேவையான ஊசியை முறையாக பயன்படுத்தி தான் ரத்தத்தை பாதுகாப்பார்.


ஆனால் ஓவியத்திற்காக எடுக்கப்படும் ரத்தம் என்பது முறையாக பாதுகாப்பு இல்லாத ரத்தமாகும். அதுமட்டுமில்லாமல் இரத்தம் இடுக்க பயன்படுத்தப்படுகின்ற ஊசி எத்தனை பேருக்கு பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியாது. எனவே விதிமுறைகள் படி, இந்த ரத்தம் எடுக்காத நிலையில் அந்த ரத்தத்தை படம் வரைவதற்கு கையாளும் பொழுது அந்த ரத்தம் எச்.ஐ.வி போன்ற நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களிடமிருந்து எடுக்கப்பட்டால் அது பலரின் தாக்கி பாதிப்பை ஏற்படுத்தும். இந்த தகவல் தெரிந்தவுடன் சென்னை மற்றும் வடபழனி தியாகராஜ நகர் பகுதியில் இருக்கின்ற ஓவியம் நிறுவனங்கள் மருத்துவத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


அங்கிருந்து அதற்காக பயன்படுத்துகிற பொருட்கள் தற்பொழுது பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த தொழிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். இளைஞனின் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. ரத்தம் என்பது பல உயிர்களை காக்க பயன்படுத்தப்படுகிறது. தவறான முறையில் பயன்படுத்துவது தடுக்கப்பட வேண்டும். தமிழகத்தில் இரத்த ஓவிய நிறுவனங்களுக்கு தடைவிதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: Maalaimalar News

Tags:    

Similar News