நெற்றியில் திருநீறு, ருத்ராட்சம் அணிந்த மாணவர்களை இழிவுப்படுத்திய ஆசிரியர் மீது வழக்கு !

நெற்றியில் திருநீறு, கழுத்தில் ருத்ராட்சம் அணிந்து வந்த மாணவர்களை இழிவாக பேசிய பள்ளி ஆசிரியர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.;

Update: 2021-10-21 08:08 GMT

நெற்றியில் திருநீறு, கழுத்தில் ருத்ராட்சம் அணிந்து வந்த மாணவர்களை இழிவாக பேசிய பள்ளி ஆசிரியர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், சின்ன அய்யன்குளம், இந்திரா நகரைச் சேர்ந்தவர் கமலகண்ணன் இவரது மனைவி ஹேமாவதி இவர்களின் மகன் கிருபானந்தன். மற்றும் குமார், ராதிகா தம்பதி மகன் கிருபாகரன். இந்த இரண்டு தம்பதிகளும் காஞ்சிபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் சைவ மதத்தை பின்பற்றி, நெற்றியில் திருநீறு பூசியும், கழுத்தில் ருத்ராட்சம் அணிந்தும் தினமும் பள்ளி செல்வது வழக்கம்.

இவர்கள் கடந்த இரண்டு வாரத்திற்கு முன் பள்ளி சென்ற இரண்டு மாணவர்களை பார்த்து, ஆசிரியர் ஜாய்சன் என்பவர் பொறுக்கிகள் தான் இப்படி ருத்ராட்சம் அணிந்து வருவார்கள் எனக் கூறி அவர்களை அடித்துள்ளனர். இதனால் மாணவர்கள் இரண்டு பேரும் இனிமேல் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இது பற்றி பெற்றோர்கள் ஆசிரியர் ஜாய்சனின் நடவடிக்கை பற்றி அறிந்து கொண்டனர். இதன் பின்னர் முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் பள்ளி கல்வித்துறை இயக்குனர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோருக்கும் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக கடந்த 17ம் தேதி சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில், மிகவும் அசிங்கமாக பேசுதல், மதத்தை இழிவு செய்தல், மாணவர்களை அடித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஆசிரியர் மீது போலீசார் வழக்குப்பதஇவு செய்துள்ளனர். மேலும், பள்ளி நிர்வாகம் ஆசிரியர் ஜாய்சனை மதுராந்தகம் சி.எஸ்.ஐ. பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Source, Image Courtesy: Dinamalar


Tags:    

Similar News