தமிழகம்: 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
வங்கக்கடலில் உருவாகன குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னை அருகாமையில் நேற்று முன்தினம் கரையை கடந்தது. இதனால் சென்னை உட்பட தமிழகத்தில் பிற மாவட்டங்களிலும் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

அதே போன்று மற்றொரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி அந்தமான் கடலில் இன்று (நவம்பர் 13) உருவாகக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது அங்கிருந்து நகர்ந்து வருகின்ற 15ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 16ம் தேதி வரை பல்வேறு இடங்களில் கனம¬யும், சில இடங்களில் குறைந்த அளவிலான மழையும் பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதே போன்று தற்போது இன்றும் தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும், சில மாவட்டங்களில் குறைந்த அளவிலான மழையும் பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Daily Thanthi