இந்து சமய அறநிலையத்துறைக்கு 69 புதிய வாகனத்தை வழங்கிய முதலமைச்சர்!

Update: 2022-04-06 09:03 GMT
இந்து சமய அறநிலையத்துறைக்கு 69 புதிய வாகனத்தை வழங்கிய முதலமைச்சர்!

தமிழகத்தில் கோயில் பராமரிப்புக்கு நிதி சரியாக ஒதுக்குவதில்லை என்று பக்தர்கள் குற்றம்சாட்டி வருகின்ற நிலையில், தற்போது இந்து சமய அறநிலையத்துறைக்கு 69 புதிய வாகனங்களை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில், அலுவலர்களுக்கு வாகனம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 108 வாகனங்கள் 8 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக தற்போது 5 கோடியே 8 லட்சம் ரூபாய் செலவில் 69 புதிய வாகனங்களை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Source, Image Courtesy: Maalaimalar

Tags:    

Similar News