ஆளுநருக்கு தரவுகளை அளிப்பது வழக்கமான ஒன்றுதான்: தலைமைச் செயலர் இறையன்பு பரபரப்பு அறிக்கை!

அந்த கடிதத்தில் தமிழகத்தில் நடைபெறும் மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் பற்றிய தரவுகளை ஆளுநர் அறிய விரும்புவர். இது பற்றி ஆளுநரிடம் தெரிந்து கொள்ள அனைத்து துறைகளின் செயலாளர்கள் தயாராக வேண்டும் எனவும், துறை சார்ந்த தரவுகளை தயார் செய்யுமாறும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

Update: 2021-10-26 12:21 GMT

தமிழகத்தில் நடைபெறும் மத்திய, மாநில மேம்பாட்டுத் திட்டங்கள் பற்றி ஆளுநருக்கு விளக்கம் தருகின்ற வகையில், விளக்கக் காட்சிகளைத் தயாரிக்குமாறு அனைத்து துறை செயலர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அந்த கடிதத்தில் தமிழகத்தில் நடைபெறும் மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் பற்றிய தரவுகளை ஆளுநர் அறிய விரும்புவர். இது பற்றி ஆளுநரிடம் தெரிந்து கொள்ள அனைத்து துறைகளின் செயலாளர்கள் தயாராக வேண்டும் எனவும், துறை சார்ந்த தரவுகளை தயார் செய்யுமாறும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், நான் அனுப்பிய கடிதம் அவசியமற்ற விவாதப் பொருளாக மாறியிருக்கிறது என்று தலைமைச் செயலாளர் இறையன்பு விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: அலுவல் ரீதியாக துறையின் செயலாளர்களுக்கு நான் அனுப்பிய ஒரு கடிதம் அவசியமற்ற ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளதாக அறிகிறேன். தமிழகத்துக்கு மாண்புமிகு ஆளுநர் அவர்கள் புதிதாக பொறுப்பேற்றுள்ளார்கள்.

அவர்களுக்கு தமிழக அரசுடைய பல்வேறு சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் பற்றி தெரிவிக்கும் வகையில் அதற்கான தரவுகளைத் திரட்டி வைத்துக்கொள்ளுமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கும் அலுவல் ரீதியான ஒரு கடிதம் அனுப்பி வைத்தேன். திட்டங்களை திரட்டி வைத்துக்கொள்ள அறிவுறுத்துவது நிர்வாகத்தில் வழக்கமானதுதான். அதனை அரசியல் பொருள் கொண்ட சர்ச்சையாக ஆக்குவது சரியானது அல்ல. இது வழக்கமான நடைமுறையில் ஒன்றுதான் என்பது தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: News 18 Tamilnadu

Tags:    

Similar News