ரூ.400 கோடியில் எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு நவீன வசதிகள்: மத்திய அமைச்சகம் முடிவு!

Update: 2022-03-26 10:39 GMT

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் மிகப்பெரியது ஆகும். இங்கு சுமார் 11 நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தினமும் 35 முக்கிய வழித்தடங்களுக்கு ரயில்கள் மற்றும் 118 புறநகர் ரயில்களும் இயக்கப்படுகிறது. இதன் மூலம் தினந்தோறும் 1.5 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பயணிகளின் நலன் கருதி உணவகங்கள் மற்றும் கழிப்பிடங்கள், உதவி மையங்கள் என்று பல வசதிகளை மத்திய ரயில்வே அமைச்சகம் செய்து கொடுத்துள்ளது.

அப்படி இருந்தும் சென்னை மாநகரில் முக்கிய ரயில் நிலையமாக எழும்பூர் இருப்பதால் அதனை புதுப்பிக்கும் முயற்சியில் ரயில்வே அமைச்சகம் இறங்கியுள்ளது. அதன் பழமை மாராமல் அதே போன்ற கட்டுமான பணிகளில் புதுப்பிக்கப்பட உள்ளது. இந்த ரயில் நிலையம் இந்தோ சாராசனிக் முறையில் கடந்த 1905ம் ஆண்டு கட்டப்பட்டு 1908ம் ஆண்டுபணிகள் முடிவடைந்தது.

இந்நிலையில், காலம் மாறிக்கொண்டே இருப்பதால் பயணிகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் மத்திய அமைச்சகம் இறங்கியுள்ளது. இதற்காக ரூ.400 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்ப வல்லுனர்களால் முகப்பு தோற்றம் புதுப்பிக்கப்பட உள்ளது. அதே சமயம் பயணிகளுக்காக ரயில் நிலையம் வளாகத்தில் நவீன முறையில் வசதிகள் மாற்றப்படுகிறது. ஓய்வு அறை மற்றும் நடைமேடைகள் புதுப்பிக்கப்படுகிறது. பயணிகள் நடை மேம்பாலங்களின் தரம் உயர்த்தப்பட உள்ளது. வயதானவர்களுக்கு லிப்ட் வசதி, நகரும் படிக்கட்டுகள் குடிநீர் வசதி, கார் பார்க்கிங் என ஏராளமான வசதிகள் செய்யப்படுகிறது.

Source,Image Courtesy: Maalaimalar


Tags:    

Similar News