காலாவதியான விசாவுடன் நெல்லை சர்ச்சில் பதுங்கியிருந்த அமெரிக்க சுற்றுலா பயணி - அதிர்ச்சியான தகவல்

Update: 2022-04-20 12:23 GMT

காலாவதியான விசாவுடன் இந்தியா முழுவதும் ஊர் சுற்றி வந்த அமெரிக்க சுற்றுலா பயணி பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்கா, வாஷிங்டன்னை சேர்ந்தவர் வெரிட். இவர் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு இந்தியாவுக்கு வந்துள்ளார். இதனையடுத்து நாடு முழுவதும் சுற்றுலா விசா மூலமாக சுற்றிப் பார்த்து வந்துள்ளார்.

அதன் பின்னர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு விமானங்கள் வெளிநாடுகளுக்கு செல்வது முற்றிலும் தடைப்பட்டது. இதன் காரணமாக அவரால் மீண்டும் அமெரிக்காவுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் கோவா, புதுச்சேரி, பகுதிகளில் சுற்றி வந்துள்ளார். செலவுக்கு அவரது உறவினர்கள் அமெரிக்காவில் இருந்து பணம் அனுப்பி வந்துள்ளனர். மேலும், கடந்த மார்ச் 31ம் தேதியே விசா காலம் முடிந்துள்ளது. இதனால் தனது நாட்டுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்துள்ளார். நேற்று (ஏப்ரல் 19) நெல்லையில் உள்ள உவரி அந்தோணியார் ஆலயத்தில் தங்கியிருந்துள்ளார். இரவு நேரத்தில் வெளியில் சென்ற சதீஷ் மற்றும் ரோனால்டோவை போலீசார் விசாரித்துள்ளனர்.

அப்போது தனது விசா காலாவதியாகவிட்டதாக போலீசாரிடம் கூறியுள்ளார். தனது விசாவை மூன்று முறை புதுப்பிப்பதற்காக விண்ணப்பித்தும் ஏற்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் அவர் எதற்காக இந்தியா வந்தார் மற்றும் எத்தனை நாட்கள் நெல்லையில் தங்கியிருந்தார் என்பது பற்றி போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source, Image Courtesy: Maalaimalar

Tags:    

Similar News