அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடை அணிவிப்பு!

அதிகாலையில் கோயிலின் நடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு 19 அடி உயர ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடைகளால் செய்யப்பட்ட மாலைகள் அணிவிக்கப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Update: 2022-01-02 04:16 GMT

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயிலில் ஒரு லட்சத்து 8 வடை மாலைகள் சார்த்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மார்கழி மாதம் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் கொண்ட இந்த நன்னாளில் ஆஞ்சநேயர் அவதரித்தார் என்பது ஐதீகம்.

இந்நிலையில், நாமக்கல்லில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் இன்று அனுமன் ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அனுமன் ஜெயந்தியை சிறப்பித்தனர்.

அதிகாலையில் கோயிலின் நடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு 19 அடி உயர ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடைகளால் செய்யப்பட்ட மாலைகள் அணிவிக்கப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Puthiyathalaimurai

Tags:    

Similar News