கல்வி நிறுவனங்களில் நடைபெறும் மரணங்கள் - போலீசார் விசாரிக்க உத்தரவு!

கல்வி நிறுவனங்களில் நடைபெறும் தொடர் மரணங்களை சி.பி.சி.ஐ.டி விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவை மாற்றி சாதாரண போலீசை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.

Update: 2022-10-21 06:24 GMT

தமிழகத்தில் இயற்கை மரணங்கள் மாறாக கல்வி நிறுவனங்களில் நிகழும் மரணங்களை சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்க வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அமைத்து தீர்ப்பு எழுதி உள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களில் நிகழும் இயற்கைக்கு மாறான மரணங்களை சிபிசிஐடி போலீஸ்சார் தான் விசாரிக்க வேண்டும் எனவும், கல்வித்துறை அதிகாரிகள் விசாரிக்கப் பின்னர் தான் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கடந்த ஜூலை மாத உத்தரவிட்டிருந்தது.


இந்த உத்தரவை மாற்றி அமைக்க கோரி தமிழ்நாடு அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி சதீஷ்குமார் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அரசு தரப்பில் இருந்து இது பற்றி கூறுகையில், கடந்த ஜூலை மாதம் பிறப்பித்த உத்தரவிற்கு பிறகு தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களின் நிகழும் மரணங்கள் 11 ஆக அதிகரித்து உள்ளது. இந்த வழக்குகள் எல்லாம் சிபிசிஐடி விசாரிக்க மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக முக்கியமான வழக்குகளை மட்டும் தான் CBCID போலீசார்கள் விசாரிப்பார்கள். அதுவும் வழக்கின் தன்மை பொறுத்து விசாரணை நடைபெறும்.


கல்வி நிறுவனங்களில் நடைபெறும் மரணங்கள் சிபிசிஐடி போலீஸ் சார் தான் விசாரணைக்க வேண்டும் என்று கோர்ட்டின் உத்தரவை பின்னர் சிபிசிஐடி போலீஸ் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் கல்வி நிறுவனங்களில் நிகழும் மரணம் குறித்து கல்வித்துறை விசாரித்த பிறகு கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவு காரணமாக ஆதாரங்களை கலைக்க வாய்ப்பு உள்ளது. இந்த உத்தரவை மாற்ற அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி இனி கல்வி நிலையங்களில் நிகழும் மரணங்கள் சம்பந்தப்பட்ட போலீசாரை விசாரிக்கலாம் என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News