பத்து ஆண்டுகளாக நடைபெறாத தேர்திருவிழாவை நடத்த வேண்டுமென இந்து முன்னணி மாவட்ட ஆட்சியரிடம் மனு !
தருமபுரியில் பத்து ஆண்டுகளாக நடத்தப்படாத கோயில் தேர்திருவிழாவை நடத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் இந்து முன்னணி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
தருமபுரியில் பிரசித்திப்பெற்றது கோட்டை கோவில், இது சோழமன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கோயில் ஆகும். இந்த கோயிலில் வருடா வருடம் தேர்திருவிழா நடைபெறுவது வழக்கம். அனால் கடந்த பத்து வருடங்களாக அந்த தேர் பவனி நடைபெறாமல்வுள்ளது.
பத்து வருடங்களாக அரங்கேறாமல் போன தேர் பவனியை எண்ணி அப்பொகுதி இந்துக்கள் வேதனையுற்றனர்.இந்நிலையில் இந்து முன்னணி அந்த தேர்திருவிழாவை நடத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது.
இது குறித்து இந்து முன்னணி சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது :
தருமபுரி கோட்டை கோவில் சோழமன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது.இக்கோவிலில் தேர்திருவிழாவானது கடந்த 10 ஆண்டுகளாகநடைபெறவில்லை.
தருமபுரி கோட்டை கோவில் சோழமன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது.இக்கோவிலில் தேர்திருவிழாவானது கடந்த 10 ஆண்டுகளாகநடைபெறவில்லை கோட்டை கோவில் தேர்திருவிழா நடத்த வேண்டுமென இந்துமுன்னணி சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு.#இந்துமுன்னணி#தருமபுரி#HinduMunnani pic.twitter.com/9PIAthJ9uC
— Hindu Munnani (@hindumunnaniorg) November 22, 2021
கோட்டை கோவில் தேர்திருவிழா நடத்த வேண்டுமென இந்துமுன்னணி சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.