அரசு பள்ளி சுவற்றில் தி.க விளம்பரம் ! இந்து முன்னணி புகாரால் அகற்றம் !

Update: 2021-11-16 06:25 GMT

நாமக்கல்லில் அரசு பள்ளிச் சுவற்றில் திராவிட கழகம் விளம்பரம் இடம்பெற்றுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள கபிலர்மலை ஒன்றியத்தில் அரசு மேல்  நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. அப்பள்ளியின் சுற்றுச்சுவரில் திராவிட கழகத்தின் விளம்பரம் இடம்பெற்றுள்ளது.



இதையறிந்த நாமக்கல் மாவட்ட இந்து முன்னணி அமைப்பினர் புகார் அளித்தனர். புகார் அளித்ததன் விளைவு அந்த திராவிட கழக விளம்பரம் பள்ளிச் சுற்று சுவரிலிருந்து அகற்றப்பட்டது. இது குறித்து இந்து முன்னணி வெளியிட்ட செய்தி குறிப்பில் : 

 நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை ஒன்றியம் பொத்தனூர் அரசு மேல் நிலைப்பள்ளி சுவற்றில் எழுதி இருந்த தேசவிரோத தி.க விளம்பரம் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் புகாரின் பேரில் இன்று அகற்றப்பட்டது.

என்று கூறப்பட்டுள்ளது. 

Hindu Munnani

Tags:    

Similar News