நீர்நிலை.ஆக்கிரமிப்பு அகற்றுவது போல் கண்துடைப்பு - மக்கள் ஏமாற்றம்!

நீர் நிலைய ஆக்கிரமிப்புகளை அகற்றுவது போல் ஒரு நாள் மட்டும் கண்துடைப்பு செய்து மக்களை ஏமாற்றிய அதிகாரிகள்.

Update: 2022-08-30 01:40 GMT

திருவள்ளுவர் மாவட்டத்தில் அமைந்துள்ளது தான் கடம்பத்தூர் ஒன்றியம். இந்த கடம்பத்தூர் ஒன்றிய நிலையத்தில் உள்ள பேரம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே நீர் நிலைய பகுதிகளை ஆக்கிரமித்து நகைக்கடை துணிக்கடை, மிக்சர் கடை, சாலையோர கடைகளை என 50க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வந்தன. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொகுக்கப்பட்ட வழக்கில் நீர் நிலைய புறம்போக்கு பகுதிகளில் ஆக்கிரமிப்பு கட்டி உள்ள வணிக வளாகங்களை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


இதனால் அந்தத் துறைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வணிக நிறுவனங்களுக்கு தகவல் அளித்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்தன. இதனால் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று ஜனவரி 19ஆம் தேதி உத்தரவிட்டது. அதன் பெயரில் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்படி, வட்டாட்சியர், கடம்பத்தூர் ஒன்றிய அலுவலர், பொதுப்பணித்துறை வருவாய்த்துறை, ஊரகத்துறை அலுவலகர்கள் இங்கு வந்த ஆக்கிரமிப்பு பணிகளை மேற்பார்வையிட்டு அகற்ற உத்தரவிட்டார்கள்.


இரண்டு JCB இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது போன்ற பணிகள் ஒரு நாள் மட்டும் தான் நடைபெற்றது. அதுவும் கண் துடிப்புக்காக மட்டும் தான். ஆனால் தற்போது ஆறு மாதங்களுக்கு மேலாக அந்த பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது தற்போது அங்குள்ள பொதுமக்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Input & Image courtesy: Dinamalar News

Tags:    

Similar News