இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தில் முறைகேடு: ஏஒன் சைக்கிள் உரிமையாளர் வீட்டில் ஐ.டி. அதிகாரிகள் அதிரடி சோதனை!

தமிழகத்தில் கடந்த மே 26ம் தேதி முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் அதிரடியான சோதனைகளை செய்து வருகின்றனர்.

Update: 2023-05-30 08:58 GMT

தமிழகத்தில் கடந்த மே 26ம் தேதி முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் அதிரடியான சோதனைகளை செய்து வருகின்றனர். அதன்படி சென்னை, கரூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட 100க்கும் அதிகமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.

நேற்று (மே29) கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஒப்பந்ததாரரான சி.எம். சங்கர் ஆனந்த் என்பவரின் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதே போன்று அவரது அலுவலகத்தில் சோதனை செய்ய முயன்றபோது பூட்டப்பட்டிருந்தது. இதனால் போலீசாரின் உதவியுடன் பூட்டை உடைத்து அதிரடியாக உள்ளே நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள ஏஒன் சைக்கிள் உரிமையாளர் சுந்தர பரிபூரணம் வீட்டில் இன்று வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர் தமிழ்நாடு அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள் வழங்கப்படும் ஒப்பந்தத்தை பெற்றுள்ளார். அதாவது இலவச சைக்கிள் வழங்கும் ஒப்பந்த திட்டத்தில் கூடுதல் விலைக்கு சுந்தர பரிபூரணம் பெற்றதாக குற்றச்சாட்டு இருந்த நிலையில் தற்போது அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News