நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 126வது பிறந்த நாள் விழா: தருமபுரியில் இளைஞர்கள் உற்சாகத்துடன் கொண்டாட்டம்!

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 126வது பிறந்த நாளை முன்னிட்டு தருமபுரியில் இளைஞர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

Update: 2022-01-23 12:53 GMT

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 126வது பிறந்த நாளை முன்னிட்டு தருமபுரியில் இளைஞர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இந்தியாவின் சுதந்திரத்திற்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து செயல்பட்டவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இவர் இரண்டாம் உலுகப் போர் நடைபெற்றபோது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த ஆயிரக்கணக்கான இந்தியர்களை ஒன்று திரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் தனது தாக்குதலை தொடர்ந்தார். மேலும் கடந்த 1945ம் ஆண்டு, ஆகஸ்ட் தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அது பற்றிய உண்மையான தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.


இந்நிலையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 126வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திரத்திற்காக பெரும்பாடு பட்டவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்பதை யாராலும் மறைத்துவிட முடியாது. அப்படிப்பட்ட மாமனிதரின் புகழ் இன்றும் இளைஞர்களால் நிலைத்து நிற்கின்றது. இந்நிலையில், தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள பாடி கிராமம். இந்த கிராமத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் நற்பணி மன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த மன்றத்தின் தலைவராக ம.கோவிந்தசாமி செயல்பட்டு வருகின்றார். இளைஞர்கள், சிறுவர்களை ஒன்றினைத்து பல்வேறு சமூக பணிகளை செய்து வருகின்றார். பாடி கிராமத்தில் பசுமை பூங்காவை உருவாக்கியுள்ளார்.

இதனிடையே இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 126வது பிறந்த நாளை முன்னிட்டு பாடி கிராமத்தில் அவரது திருவுருப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தினர். இதில் மன்றத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு நேதாஜிக்கு மரியாதை செலுத்தினர். இதன் பின்னர் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினர். இதில் மன்ற செயலாளர் சேட்டு, கோவிந்தன், முனிராஜ், எண்டப்பட்டி சக்கரவர்த்தி, குமரேசன், பச்சையப்பன், ஆனந்த், சின்னசாமி, பச்சியப்பன், மாதேஷ், கோவிந்தன், செல்வராஜ், ராஜா, ஸ்ரீராமன், ஜெகதீஸ், வெங்கடேஷ், திருமூர்த்தி, கணேஷ் ஜெயகிருஷ்ணன், இளவரசன், தமிழ்பாரதி மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News