தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிட திட்டம் இருக்கிறதா? பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம்?

2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிட திட்டம் இருக்கிறதா?

Update: 2023-01-28 05:41 GMT

பாராளுமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பல்வேறு கட்சிகளும் ஒவ்வொருவரும் களத்தில் இறங்கி வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. இதற்கு மத்தியில் தற்பொழுது பாரதிய ஜனதாவும் மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க பல்வேறு வியூகங்களை கையாண்டு வருகிறது. குறிப்பாக தென் தமிழகத்தில் பாரதீய ஜனதா சார்பில் கூடுதலான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற ஒரு முடிவில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிடுவார் என்ற தகவல்களும் வெளியானது.


எதிர்பாராத விதமாக பிரதமர் மோடி அவர்கள் மாணவர்களுடன் உரையாடும் பொழுது எதிர்க்கட்சிகள் விமர்சனம் குறித்து ஒரு மாணவரின் கேள்விக்கு பதில் அளித்த பிரதமர், வடமாநிலத்தில் ஒரு தொகுதியிலும் தென் மாநிலத்தில் ஒரு தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்து இருப்பதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக அவர் தென் மாநிலம் என்று குறிப்பிடும் பொழுது தமிழகத்தில் தான் அவர் போட்டியிடுவார் என்று பல்வேறு கேள்விகள் தற்போது எழுந்து இருக்கிறது. தமிழ்நாட்டில் பிரதமர் மோடி போட்டி போட்டு விட்டால் அவர் ராமநாதபுர தொகுதியில் தான் போட்டியிடுவார் என்ற தகவல்களும் வெளியானது.


இது பற்றி தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையிடம் கேட்ட போது, அவர் கூறுகையில், பிரதமர் மோடி வெளிநாட்டை சேர்ந்தவர் இல்லை. அவர் இந்தியர். அவர் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம். நாட்டு மக்கள் அனைவரும் அவர் மீது அன்பும், பாசமும் வைத்துள்ளனர். அடுத்த பாராளுமன்ற தேர்தலில் அவர் தமிழ்நாட்டில் போட்டியிட உள்ளதாகவும் பல்வேறு வதந்திகள் பரவுகிறது. மக்கள் தற்பொழுது பாஜக என்ன செய்ய இருக்கிறது என்பதை மக்கள் உற்று நோக்க ஆரம்பித்து விட்டார்கள்.. பா.ஜ.க வலுவாக வளர்ந்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

Input & Image courtesy:Maalaimalar


Tags:    

Similar News