புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு: பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை அதிகரித்துள்ளது. அதே போன்று சென்னையில் நேற்று முதல் மிக அதித கனமழை பெய்து வருவதால் பல்வேறு ஏரிகள் நிரம்பி வருகிறது. இதன் காரணமாக உபரி நீர் திறப்பது அதிகரிக்கப்பட்டு தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதே போன்று செம்பரம்பாக்கம் ஏரியின் முழுக் கொள்ளளவு 25.55 அடியில், இன்று மதிய நிலவரப்படி நீர்மட்டம் 21.45 அடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 1,590 கனஅடியாக உள்ள நிலையில் ஏரியில் தற்போது உபரி நீர் திறந்து விடப்படுகிறது. அதன்படி இன்று (நவம்பர் 7) மதியம் முதல் கட்டமாக வினாடிக்கு 500 கனஅடியாக உபரி நீர் திறக்கப்படுகிறது.
பிற்பகலுக்கு பின்னர் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பால் உபரி நீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 1000 கனஅடி என்ற அளவில் நீர் திறக்கப்பட்டுள்ளது. அதே போன்று புழல் ஏரியில் இருந்தும் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேறுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அரசு சார்பில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
Source: Maalaimalar
Image Courtesy:Chennai Tourism