சென்னை மழை: தயார் நிலையில் விமானப்படை ஹெலிகாப்டர்கள்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை (வியாழக்கிழமை 11.11.2021) தமிழக கடலோரப் பகுதியை நெருங்க உள்ளது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

Update: 2021-11-10 05:09 GMT

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை (வியாழக்கிழமை 11.11.2021) தமிழக கடலோரப் பகுதியை நெருங்க உள்ளது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஏற்கனவே ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இடைவிடால் நள்ளிரவு நேரங்களிலும் மழை பெய்து வருகிறது. சென்னையில் மட்டும் பல்வேறு தெருக்கள் மழை வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. மக்கள் வீடுகளை விட்டு பல முகாம்களில் தங்கியுள்ளனர். பலர் வீடுகளின் மொட்டை மாடியிலும் தஞ்சம் புகுந்துள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்காக அரசை நம்பி காத்திருக்கும் சூழலும் நிலவி வருகிறது.


இந்நிலையில், பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 38 மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது. அதிகமான மழையாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அங்கு சுமார் 16.84 முதல் 74.70 மி.மீ மழை பொழிந்துள்ளது.

மேலும், கனமழை பற்றி கடலோரத்தில் வசிக்கும் மக்கள் தெரிந்து கொள்ள 434 இடங்களில் முன்னெச்சரிக்கை தகவல் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். சென்னையில் இந்திய விமானப் படை, கப்பல் படை, கடலோர காவல் படை, ராணுவம் தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்புத்துறை, தமிழ்நாடு பேரிடர் மீட்டு படை அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டுள்ளது. அவசர காலங்களில் பயன்படுத்துவதற்காக சூலூர் விமான தளத்தில் 4 ஹெலிகாப்டர்களும், இந்திய கடற்படையில் 5 டோனியர் விமானங்களும் 2 ஹெலிகாப்டர்களும் தேவைப்படுகின்ற இடங்களுக்கு அனுப்பும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றார். 


கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது இந்திய விமானப்படை வீரர்கள் அதிகமானோர்களை மீட்டு வந்தனர். அதிலும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை கப்பல் படை வீரர்களும் மீட்டு பத்திரமாக கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் சென்னையை அச்சுறுத்தி வரும் கனமழையால் மீண்டும் வெள்ளம் சூழ்ந்து வருகிறது. இதனால் பொதுமக்களை மீட்பதற்கு விமானப்படை வீரர்கள் தயார் நிலையில் இருப்பது தற்போது சென்னை வாசிகளுக்கு சற்று ஆறுதலை தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Minnambalam

Image Courtesy: The Indian Express


Tags:    

Similar News