30 ஆண்டுகளுக்கு மேல் ஆக்கிரமிப்பில் இருந்த கோவில் நிலம் - 24.70 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு!

30 ஆண்டுகளுக்கு மேலான ஆக்கிரமிப்பில் இருந்த சுமார் 24.70 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்கப்பட்டிருக்கிறது.

Update: 2023-01-27 00:52 GMT

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகில் உள்ள பரமேஸ்வரன் பாளையத்தில் அமைந்திருக்கிறது வெங்கடாச்சல பெருமாள் கோவில். இந்த கோவில் இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. குறிப்பாக இந்த கோவிலுக்கு சொந்தமான கோவில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது இந்த சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 24.7 ஏக்கர் இடம் பரமேஸ்வரன் ஆலயம் அருகில் உள்ள தேவராயபுரம் கிராமத்தில் நான்கு பகுதிகளாக அடுத்தடுத்த அமைந்திருக்கிறது.


நான்கு இடங்களும் விவசாய நிலமாக இருந்தாலும் இரண்டு நிலங்கள் மட்டுமே முழு விவசாய நிலங்களாக இருக்கிறது. மீத பகுதியை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருக்கிறது. அப்பகுதியைச் சேர்ந்த ராமசாமி, சுந்தர்ராஜ், ஸ்ரீனிவாச ஐயங்கார் அய்யோ கோவிலுக்கு சொந்தமான இடத்தை பயன்படுத்தி வருகிறார்கள் என்பது கண்டறியப் பட்டது. இது தொடர்பாக கோவில் நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தது.


கடந்த மே மாதம் மேற்கண்ட 27.4 ஏக்கர் நிலம் கோவிலுக்கு சொந்தமானது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தற்பொழுது இந்த நிலம் கோவில் நிர்வாகம் சார்பில் கையகப் படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த இடத்தில் தற்பொழுது இந்து சமய அறநிலையத்துறை தற்பொழுது அறிவிப்பு பலகையும் அமைத்து ஆக்கிரமிப்பு அகற்றி இருக்கிறது.

Input & Image courtesy: The Hindu

Tags:    

Similar News