"தமிழகம் போன்ற ஒரு பெரிய மாநில அரசு, துப்புரவு தொழிலாளியை எதிர்த்து சட்டரீதியாக போட்டியிடுவதா?" தமிழக அரசை பொட்டில் அடித்தாற்போல் உச்ச நீதிமன்ற நீதிபதி கேள்வி!

Update: 2021-10-30 04:25 GMT

துப்புரவு தொழிலாளர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்ட மனு  நிராகரிக்கப்பட்டது, மேலும் தமிழக அரசு ₹50,000 தொகையை செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது. "தங்களை தற்காத்துக்கொள்ளவே அவர்களுக்கு பணம் தேவை, அவர்கள் எப்படி உச்ச நீதிமன்றத்தை நாடுவார்கள்?" என தி.மு.க ஆளும் தமிழக அரசை சராமாரியாக தாக்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.

போடிநாயக்கனூர் நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் சிலர் மூன்று வருடங்களுக்கு முன்பு நகராட்சியின் மூன்றாம் நிலை துப்புரவு தொழிலாளர்களாக நியமனம் செய்யப்பட்டனர். மூன்று வருடங்கள் ஆகியும் ஊதிய தொகையை வழங்காததால், அதை தொகுத்து வழங்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கில் இவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வரவே, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இறுதி தீர்ப்பை எதிர்த்து மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனு வெள்ளிக்கிழமையன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள்  நாகேஸ்வரர் ராவ் மற்றும் பி.ஆர்.கவை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் "தமிழ்நாடு  போன்ற ஒரு பெரிய மாநில அரசு ஒரு துப்புரவு தொழிலாளியை எதிர்த்து சட்டரீதியாக போட்டி  போடுவதா? அவர்களை ஏன் உச்ச நீதிமன்றம் வரை கொண்டு வர வேண்டும்? ஒரு வக்கீலை வைத்து இந்த வழக்கில் வாதாட அவர்கள் என்ன செல்வந்தர்களா? ஒரு ஜூனியர் வழக்கறிஞரே மிகுந்த தொகை கேட்பார் என்பது உங்களுக்கு தெரியாதா?" என தமிழக அரசு கூடுதல் அரசு வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரியிடம் நீதிபதிகள் இந்த கேள்விகளை எழுப்பினர்.

ஒரு துப்புரவு தொழிலாளியை எதிர்த்த சட்ட ரீதியியாக போராடிய தி.மு.க அரசை பொட்டில் அடித்தாற்போல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பிய கேள்வி பேசுபொருளாகியுள்ளது. 

LiveLaw

Tags:    

Similar News