தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்.!
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கோடை காலம் என்பதால் பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனிடையே கடந்த ஒரு சில நாட்களாக வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மற்றும் சேலம், நாமக்கல், ஈரோடு, திருவண்ணாமலையில் மிதமான மழையும் பெய்யக்கூடும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.