அதிரடி காட்டிய ஆளுநர்! தெறிக்கவிடும் காவல் துறை! தலைதெறிக்க ஓடும் ரவுடிகள் கூட்டம்!
தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டதை தொடர்ந்து ரவுடிகளின் அராஜகங்களை ஒடுக்க வீடுகளில் அதிரடியான சோதனைகள் நடைபெற்று வருகிறது. தலைநகர் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் குற்றங்களை தடுக்க ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனைகள் மற்றும் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் ஆங்காங்கே கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே புதியதாக பொறுப்பேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் உளவுத்துறை ஏடிஜிபியிடம் சட்டம் ஒழுங்கு பற்றி கேட்டறிந்தார். ஆளுநர் சந்திப்புக்கு பின்னர்தான் தற்போது ரவுடிகளின் வீடுகளில் அதிரடியான சோதனைகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
அதே போன்று சென்னை புளியந்தோப்பில் உள்ள 50க்கும் மேற்பட்ட ரவுடிகளின் வீடுகளில் போலீசார் இரவு நேரங்களில் சோதனை நடத்தினர். முன்னெச்சரிக்கையாக திண்டுக்கல்லில் 44, பெரம்பலூரில் 6 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியலூரில் 36 ரவுடிகளை காவல் நிலையங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சோதனைக்கு பின்னர் 39 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இதே போன்ற பல்வேறு மாவட்டங்களில் அதிரடியான சோதனைகள் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
Source: Daily Thanthi
Image Courtesy:Minnambalam