இனிமேல் நாள் கணக்கில் மின் தடை இருக்காது.. 2 மணி நேரம்தான் இருக்கும்.. பல்டியடித்த மின்வாரியம்.!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து கடந்த 2006 முதல் 2011 வரை இருந்த மின்தடை போன்று தற்போதைய நேரத்திலும் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் துயரத்திற்கு தள்ளப்பட்டனர்.

Update: 2021-05-31 11:53 GMT

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து கடந்த 2006 முதல் 2011 வரை இருந்த மின்தடை போன்று தற்போதைய நேரத்திலும் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் துயரத்திற்கு தள்ளப்பட்டனர்.

காலையில் மின்தடை ஏற்பட்டால் மீண்டும் எப்போது வரும் என்பதே யாருக்கும் தெரியாத நிலை இருந்து வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் மின்தடை செய்யப்படுவதற்கு ஒருநாள் முன்பாகவே செய்திதாளில் அறிவிப்பு வெளியிடப்படும். இதனால் பொதுமக்கள் முன்கூட்டியே அனைத்து பணிகளையும் செய்து வைத்து விடுவார்கள். ஆனால் திமுக புதிதாக பொறுப்பேற்ற பின்னர் மின்தடை ஏற்பட்டு வந்தது. தமிழகத்தில் மின்தடை குறித்து 13000 புகார்கள் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




 


இந்நிலையில், பராமரிப்புப் பணிக்கான மின் நிறுத்த நேரத்தை 2 மணி நேரமாக குறைத்து மின்வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது இனிமேல் 2 மணி நேரம் மட்டுமே மின்தடை செய்யப்பட வேண்டும் என்றும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யாமல் பிற்பகல் 12 மணிக்குள் 2 மணி நேரம் நிறுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.




 


கடந்த 2006 முதல் 2011 வரை இருந்த திமுக ஆட்சியில் இருந்த மின்தடை தற்போதைய ஆட்சியில் வந்து விடுமா என்று அனைத்து பொதுமக்களும் புலம்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News