தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை.!

தென்மேற்குப் பருவக் காற்று காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2021-07-13 10:51 GMT

தென்மேற்குப் பருவக் காற்று காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.


நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், தென்காசி, மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவம் என கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News