நடத்துனர்களை முறத்தால் அடியுங்கள்! அமைச்சர் துரைமுருகன் பேச்சால் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்!
அமைச்சர் துரைமுருகன் பேச்சை கண்டித்து தஞ்சாவூரில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் நடத்துனர்கள், டிரைவர்கள் இன்று காலை (அக்டோபர் 1) திடீரென்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமைச்சர் துரைமுருகன் பேச்சை கண்டித்து தஞ்சாவூரில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் நடத்துனர்கள், டிரைவர்கள் இன்று காலை (அக்டோபர் 1) திடீரென்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசமாக பயணம் செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து பெண்களை பேருந்தில் மதிப்பதில்லை என்று உள்ளாட்சி தேர்தல் பிரச்சராத்தில் ஈடுபட்ட அமைச்சர் துரைமுருகனிடம் கூறினர். அதற்கு நடத்துனர்களை முறத்தால் அடியுங்கள் என்று சர்ச்சையான வகையில் கருத்து கூறினார்.
இந்த கருத்தை கண்டித்து தஞ்சாவூர் ஜெபமாலைபுரத்திலுள்ள அரசுப் போக்குவரத்து கழக பணிமனையில், காலை 5 மணி முதல் டிரைவர்கள், நடத்துனர்கள் பேருந்துகளை இயக்காமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அனைத்து தொழிற்சங்கத்தினரும் பங்கேற்றனர்.
இது பற்றி தகவல் அறிந்த போக்குவரத்துக் கழகக் கோட்ட மேலாளர் செந்தில்குமார் மற்றும் கிளை மேலாளர்கள் பணிமனையில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன் பின்னரே காலை 7.15 மணிக்கு பேருந்துகளை இயக்க தொடங்கினர். திமுக அமைச்சர் சர்ச்சையான வகையில் கருத்து கூறிய சம்பவம் தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து ஊழியர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Source, Image Courtesy: Dinamalar