கோயில் நிலங்களில் முறைகேடு நடந்தால் அதிகாரிகளே பொறுப்பு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
கோயில் நிலங்களில் நடைபெறுகின்ற முறைகேடுக்கு அதிகாரிகளை பொறுப்பு ஏற்கின்ற வகையில் கொள்கை மாற்றத்தை கொண்டு வர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
கோயில் நிலங்களில் நடைபெறுகின்ற முறைகேடுக்கு அதிகாரிகளை பொறுப்பு ஏற்கின்ற வகையில் கொள்கை மாற்றத்தை கொண்டு வர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அனுமந்தராய சுவாமி கோயில் உட்பட ஏழு கோயில்களுக்கு சொந்தமான கோடிக்கணக்கான மதிப்பு நிலங்கள் அதிகாரிகளின் உதவியுடன் சட்டவிரோதமாக குவாரி மூலமாக கொள்ளையடித்து வருவதாக ராமகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அவரது மனுவில் கோயில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலங்களை மீட்டு கோயில்களுக்காகவே பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறியிருந்தார்.
இந்நிலையில், வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது, மனுதாரர் குற்றச்சாட்டுகள் பற்றி அரசு நடவடிக்கை மேற்கொள்ளத் துவங்கியிருப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் ஆய்வுக் கூட்டம் நடத்தி சட்ட விரோதமாக நடத்தப்படும் குவாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்று அரசு தரப்பு கூறியுள்ளது. இதனை தொடர்ந்து கோயில் நிலங்களில் நடைபெறும் சட்டவிரோத குவாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்த வேண்டும் என ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ளவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், கோயில் சொத்துக்களை முறையாக பராமரிக்காத அதிகாரிகளே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என நீதிமன்றம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
Source: Hindu Tamil
Image Courtesy: Dinamani