இந்து முன்னணி மாநிலத் தலைவர் தலையிட்டதன் விளைவு : வேதபுரி தக்ஷிணாமூர்த்தி ஆலய ஐம்பொன் சிலைகளை மீட்டது காவல்துறை !

Update: 2021-10-29 08:21 GMT

தேனி : இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நேரில் சென்று  தலையிட்டதன் விளைவாக வேதபுரி தக்ஷிணாமூர்த்தி ஆலய ஐம்பொன் சிலைகளை திருடிய குற்றவாளிகளை, நேற்று கைது செய்தது காவல்துறை .  

தேனி அருகே சில தினங்களுக்கு முன்பு வேதபுரி தட்சிணாமூர்த்தி கோவிலில்  பின்புற கண்ணாடியை   உடைத்து, சிலை திருடும் கும்பல் கோயிலுக்குள் புகுந்து. அங்கிருந்த தாயுமாணவர், மாணிக்கவாசகர், வியாசர், சனகர், சனதனர், சனந்தகுமாரர், நந்தி மற்றும் பலிபீடம் என ஓம்பது ஐம்பொன் சிலைகளையும், பித்தளை உண்டியலையும்  சிலை திருடும் கும்பல் திருடியது.

இதனையடுத்து  "காவல்துறை உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்" என இந்து முன்னணி  மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் சம்பவ நடந்த அன்று  நேரில் சென்று கோரிக்கைவிடுத்தார்.




 இந்நிலையில் நேற்று  சிலைகளை திருடியவர்களில், 24  வயதுடைய ஸ்ரீ தர் என்பவர் காவல்துறையிடம் சிக்கினார்.அவரிடமிருந்து திருடு போன சிலைகளை காவல் துறை கைப்பற்றியது.  கைதான ஸ்ரீ தர் முன்னமே சிலை திருடிய வழக்கில் கைதானவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்நிலையில் சிலைகளை திருடர்களிடமிருந்து கைப்பற்றிய காவல் துறைக்கு பாராட்டு  தெரிவித்துள்ளது  இந்து முன்னணி.



இந்து முன்னணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் " உடனடி நடவடிக்கையாக கொள்ளையர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து சிலைகளை மீட்ட மாவட்ட காவல் துறைக்கு பாராட்டுக்கள்" என பாராட்டியுள்ளது.

Hindu Munnani


Tags:    

Similar News