தமிழகத்தில் முழு ஊரடங்கு எதிரொலி.. இன்று எந்தெந்த பணிகளுக்கு அனுமதி?

பால் வினியோகம் மற்றும் செய்தித்தாள்கள் வினியோகம் வழக்கம்போன்று நடைபெறலாம்.

Update: 2021-04-25 04:03 GMT

பெருகி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த சமயங்களில் எந்தெந்த பணிகளுக்கு மட்டும் அரசு விதிவிலக்கு அளித்துள்ளது என்று பார்ப்போம்.

பால் வினியோகம் மற்றும் செய்தித்தாள்கள் வினியோகம் வழக்கம்போன்று நடைபெறலாம்.




 


ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையை சார்ந்தவர்கள் வழக்கம்போல் பணி செய்யலாம்.

மருத்துவமனைகள், லேப், மெடிக்கல், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி உள்ளிட்ட சார்ந்த பணிகள் நடைபெறலாம்.

மேலும், சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளைபொருட்களை எடுத்து செல்லும் வாகனங்கள், பெட்ரோல், டீசல் எல்.பி.ஜி. கியாஸ் போன்ற எரிபொருளை எடுத்துச் செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் இயங்கலாம்.




 


தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்கலாம்.

ஓட்டல்களில் இன்று காலை 6 மணி முதல் காலை 10 மணி வரையிலும், மதியம் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

அதே போன்று உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு இரவுநேர கட்டுப்பாடு பொருந்தும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News