எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் புதிய திட்டத்தை கையில் எடுக்கும் நிதிஅயோக் மற்றும் உலக வங்கி !
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் புதிய திட்டத்தை கொண்டு வரும் நிதிஅயோக் !
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை சந்தை வளர்ச்சி அடைய அதிகளவிலான வாய்ப்புகள் இருக்கும். இருந்தாலும் அத்தகைய வாய்ப்புகள் மக்களை சரியாக சென்றடைவதில்லை. குறிப்பாக எலக்ட்ரிக் வாகனங்களின் நன்மைகளைப் பற்றி மக்கள் அறிந்து கொள்வதே இல்லை. இந்தச் சூழ்நிலையில் மாற்ற வேண்டும் என்பதற்காகப் புதிதாக ஒரு திட்டத்தை உருவாக்கி அதை மத்திய அரசின் அமைப்பான நிதிஅயோக் மற்றும் உலக வங்கி இணைந்து அளிக்க முடிவு செய்துள்ளது. நிதிஅயோக் மற்றும் உலக வங்கி இணைந்து வழங்கும் இத்திட்டத்தின் மூலம் இந்தியாவில் எல்கட்ரிக் வாகனங்களுக்கு வேகமாகவும், எளிதாகவும் நிதியுதவி அளிக்க முடிவு செய்துள்ளது.
இத்திட்டத்தின் மூலம் இந்தியாவில் குறைவாக இருக்கும் எலக்ட்ரிக் வாகன விற்பனையில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். நிதிஅயோக் மற்றும் உலக வங்கி இணைந்து சுமார் 300 மில்லியன் டாலர் மதிப்பிலான முதல் நஷ்ட ஆபத்துக்களைப் பகிரும் திட்டத்தை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தை SBI ப்ரோகிராம் மேனேஜர் ஆக இயங்க உள்ளது. 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான தொகையை எலக்ட்ரிக் வாகன விற்பனைக்கு நிதியுதவி அளிக்க முடியும். இதனால் இத்துறை வர்த்தகம் பெரிய அளவில் வளர்ச்சி அடைவது மட்டும் அல்லாமல் உற்பத்தியும் அதிகரிக்கும்.இந்த நஷ்ட ஆபத்துக்களைப் பகிரும் திட்டத்தைப் பயன்படுத்தி வங்கிகள் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான கடனை அதிகளவில் அளிக்க முடியும்.
இந்தக் கடனில் பாதிப்பு ஏற்பட்டால் இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 300 மில்லியன் டாலர் மூலம் ஈடு செய்து கொள்ள முடியும். கடன் வட்டி விகிதம் இந்தக் கட்டமைப்பு மூலம் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான கடனை வங்கிகள் அதிகளவில் அளிப்பது மட்டும் அல்லாமல், மேலும் விற்பனை, உற்பத்தி ஆகியவை அதிகரிக்கும். அனைத்திற்கும் மேலாக இத்திட்டம் மூலம் எலக்ட்ரிக் கார்களுக்கான கடன் வட்டி விகிதம் 10 முதல் 12 சதவீதம் வரையில் குறைக்க முடியும் என நிதிஅயோக் அமைப்பின் CEO அமிதாப் காந் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy:Economic times