தொற்றின் இரண்டாம் அலையால் இந்தியாவின் G.D.P-யை 9.2 சதவீதமாகக் குறைத்தது பார்க்லேஸ்.!

Update: 2021-05-25 08:47 GMT
தொற்றின் இரண்டாம் அலையால் இந்தியாவின் G.D.P-யை 9.2 சதவீதமாகக் குறைத்தது பார்க்லேஸ்.!

செவ்வாயன்று பிரிட்டிஷ் தரவு ஒன்று, 22 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு வளர்ச்சியை 0.80 சதவீதம் குறைந்து 9.2 சதவீதமாகக் குறைத்துள்ளது. மேலும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பாதிப்பு கணக்கிடப்பட்டதை விட அதிகமாக உள்ளது என்றும் அது கூறியது.


மேலும் நாட்டில் தடுப்பூசி செலுத்தும் வேகம் மற்றும் மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து பார்கிலேஸ் தலைமை இந்தியப் பொருளாதார நிபுணர் ராகுல் பாஜுரிய குறிப்பிட்டார்.

"இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை சற்று குறையத் தொடங்கினாலும், அதனால் மாநிலங்களில் விதிக்கப்படும் கட்டுப்பட்டால் பொருளாதார செலவுகள் அதிகமாக உள்ளன.. எனவே மொத்த உள்நாட்டு உற்பத்தியை நிதியாண்டு 22 இல் 0.8 சதவீதம் குறைத்து 9.2 சதவீதமாகக் குறைக்கிறோம்," என்று பாஜுரிய தெரிவித்தார்.

நாட்டில் புதிய பாதிப்புகள் அதிகமாக இருந்தாலும், ஒட்டுமொத்த நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன, இதனால் வரும் நாட்களில் பொருளாதாரம் மீண்டும் அதிகரிக்கலாம் என்று அவர் தெரிவித்தார். மேலும் மே மாதத்தில் பொருளாதாரம் கூர்மையான சரிவைச் சந்தித்ததாக அவர் தெரிவித்தார்.

"இந்த ஊரடங்கு ஜூன்' இறுதி வரை நீட்டிக்கப்படலாம் என்று நம்புகிறோம், இப்போது பொருளாதார இழப்புகள் 74 பில்லியன் அமெரிக்கா டாலர் கணக்கிடப்படுகிறோம்," என்று அவர் குறிப்பிட்டார்.

"தற்போதைய தடுப்பூசி இயக்கம் மெதுவாக மேற்கொள்ளப்படுவதால் மூன்றாம் அலை வீசும் போது அபாயங்கள் ஏற்படக்கூடும்," என்று அது எச்சரித்தது.


கொரோனா தொற்றின் மூன்றாம் அலை மேலும் எட்டு வாரங்களுக்கு ஊரடங்குக்கு வழிவகுக்கும், இதனால் பொருளாதார செலவுகள் உயரும் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.7 சதவீதம் குறையும் என்று கூறியது.

Tags:    

Similar News