இந்தியா தடுப்பூசிகளின் பங்கு குறைவு: DGP விகிதத்தினை குறைத்து காட்டுமா ?

இந்தியாவின் தற்போது தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களில் பங்கு குறைவாக இருப்பதால், வளர்ச்சியினை குறைத்த ரேட்டிங்ஸ் நிறுவனம்.

Update: 2021-08-20 13:45 GMT

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியமான ஒன்று தடுப்பூசிகளின் பங்கு என்பது, தற்போது வரையிலும் முன்பை விட தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ள நிலையில், இந்தியாவின் GDP விகிதத்தினை பல்வேறு கணிப்பு நிறுவனங்களும் குறைத்து வருகின்றன. கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட அலையின் காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் வரலாறு காணாத அளவு சரிவினைக் கண்டுள்ளது இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் இந்த பிரச்சனையில் சிக்கி தவித்தனர். 


ஆனால் தற்போது மீண்டு வந்து கொண்டிருந்தாலும், தற்போது உருமாற்றம் அடைந்த கொரோனாவின் டெல்டா பிளஸ் வைரஸ் தாக்கம் என்பது பல நாடுகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தடுப்பூசி விகிதமும் குறைவாக உள்ளது. இந்தியாவில் இதுவரையில் தாக்கம் பெரியளவில் இல்லாவிட்டாலும், அதே சமயம் தடுப்பூசி விகிதமும் இந்தியாவில் குறைவாகவே உள்ளது. இது சந்தையில் இன்னும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொருளாதாரம் மேற்கொண்டு சரிவினைக் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


GDP கணிப்பு குறைப்பு இதற்கிடையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்தான கணிப்பினை இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம் மாற்றியமைத்துள்ளது. இது முன்னதாக 9.6% ஆக இருந்த வளர்ச்சி விகிதத்தினை, 9.4% ஆக குறைத்துள்ளது. இது நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் 15.3% ஆக இருக்கலாம் என கணித்துள்ளது. இதுவே இரண்டாம் காலாண்டில் 8.3% ஆகவும், மீதமுள்ள இரு காலாண்டுகளிலும் 7.8% வளர்ச்சி இருக்கலாம் என்று தற்பொழுது ரேட்டிங்ஸ் நிறுவனம் கணித்துள்ளது.

Input: https://indianexpress.com/article/business/economy/ind-ra-revises-up-fy22-gdp-estimate-to-9-4-flags-rising-inequality-in-k-shaped-recovery-7461559/

Image courtesy: Indian Express 


Tags:    

Similar News