பட்ஜெட் 2022: கிரிப்டோகரன்சிக்கு இந்தியாவில் விதிக்கப்படும் வரி!

இந்தியாவில் கிரிப்டோகரன்சிக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்பட உள்ளது.

Update: 2022-02-01 13:37 GMT

இந்தியாவில் கிரிப்டோகரன்சி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதன் காரணமாக மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி இணைந்து டிஜிட்டல் நாணயங்களை வெளியிடுவது குறித்து ஆலோசித்து வந்தது. அதற்கு முன்னர் கிரிப்டோகரன்சிகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை குறைக்கும் விதமாக தற்போதைய பட்ஜெட் முக்கிய அறிவிப்பு ஒன்றை மத்திய நிதி அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார். பிளாக்செயினைப் பயன்படுத்தி டிஜிட்டல் நாணயங்களை, 2023 ஆம் ஆண்டுக்குள் ரிசர்வ் வங்கியால் தொடங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


டிஜிட்டல் நாணயமானது மிகவும் திறமையான மற்றும் மலிவான நாணய மேலாண்மை அமைப்புக்கு வழிவகுக்கும். எனவே, 2022 மற்றும் 2023 முதல் இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் பிளாக்செயின் மற்றும் பிற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் ரூபாயை அறிமுகப்படுத்த முன்மொழியப் பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, ​​நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2022-23 நிதியாண்டில் அரசாங்கம் டிஜிட்டல் ரூபாயை அறிமுகப்படுத்தும் என்றும், மெய்நிகர் சொத்துக்களுக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் கூறினார். மேலும் மெய்நிகர் சொத்துக்கள் என்பது டிஜிட்டல் நாணயங்கள் மற்றும் கரன்சிகள் போன்ற இரண்டையும் உள்ளடக்கியது என்பது குறிப்பிடதக்கது.


 2022- 23 நிதியாண்டில் டிஜிட்டல் ரூபாய் அல்லது மத்திய வங்கி டிஜிட்டல் நாணயத்தை (CBDC) வெளியிட அரசாங்கம் முன்மொழிந்துள்ளது . கூடுதலாக, பட்ஜெட், மெய்நிகர் சொத்துக்கள் மீது 30 சதவீதம் வரி விதிக்கவும், தனியார் கிரிப்டோகரன்சிகள் மற்றும் டோக்கன்களின் வர்த்தகத்தை திறம்பட சட்டப்பூர்வமாக்குகிறது. தனியார் மெய்நிகர் நாணயங்களை சட்டப்பூர்வ டெண்டராகப் பயன்படுத்துவதை அனுமதிக்காத அதே வேளையில், ஃபியட் டிஜிட்டல் கரன்சியை வைத்திருக்கும் நபர்கள் அனைவரும் அடுத்த நிதி ஆண்டில் 30% வருமான வரியை செலுத்த வேண்டும் என்றும் கூறப்படுகிறது. மேலும் தாங்கள் இதை மற்ற நபர்களுக்கு மாற்றுவதன் மூலமாக TDS ஒரு சதவீதமாக அவர்கள் செலுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த திருத்தம் ஏப்ரல் 1, 2023 முதல் நடைமுறைக்கு வரும்.

Input & Image courtesy:Indian Express

Tags:    

Similar News