இந்தியாவில் விரைவில் எலக்ட்ரிக் டிராக்டர் - மத்திய அமைச்சர் தகவல்!

விரைவில் எலக்ட்ரிக் டிராக்டர், டிரக் ஆகியவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

Update: 2022-06-05 02:35 GMT

மகாராஷ்டிராவில் தற்போது கோவை நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் நிகழ்ச்சிகள் உரையாற்றும்போது கூறுகையில், இந்தியாவில் தற்போது மாற்று எரிபொருளுக்கான அவசியமும் தேவையும் ஏற்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் எலக்ட்ரானிக் வாகனங்களின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மூன்று ஆண்டுகளுக்கு முன் எலெக்ட்ரிக் வாகனங் ள் குறித்து பேசிய போது மக்கள் அதை பற்றி தன்னிடம் கேள்வி கேட்டதாகவும் குறிப்பிட்டார். ஆனால் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மிகப் பெரிய தேவை வந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் வருகையை அடுத்து, தற்போது எலக்ட்ரிக் கார், எலக்ட்ரிக் பேருந்து ஆகியவையும் வந்துவிட்டதை அவர் சுட்டிக்காட்டினார். எனவே இந்தியாவில் விரைவாக எலக்ட்ரான் மற்றும் டிரக் ஆகியவற்றை தான் அறிமுகப்படுத்த இருப்பதாகவும் அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் தெரிவித்துள்ளார். எத்தனால் கலந்த பெட்ரோலில் ஓடும் என்ஜின்களை பஜாஜ் மற்றும் TVS நிறுவனங்கள் தயாரித்திருப்பதாகக் குறிப்பிட்ட நிதின் கட்கரி, முழுமையாக எத்தனாலால் இயங்கக் கூடிய என்ஜினையும் உருவாக்க முடியும் என கூறினார்.


எனவே இத்தகைய வாகனங்கள் இந்திய சந்தையில் புதுவித பொருட்களின் உற்பத்தியை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இதனால் சுற்றுப்புறத்திற்கு மாசு ஏற்படுத்தாத வகையில் வாகனம் உருவாக்கப்படும் இது எதிர்காலத்தில் புதிய பாதையில் அழைத்துச் செல்லும் என்பதையும் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: News 7

Tags:    

Similar News