இந்தியாவில் தயாரித்த விக்ராந்த் போர்க்கப்பல் - நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர்!

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட விக்ராந்த் விமானந்தாங்கி போர்க்கப்பல் செப் 2 ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர்

Update: 2022-08-24 02:19 GMT

இந்தியாவிலேயே தயாரித்து விக்ராந்த் விமானந்தாங்கி போர்க்கப்பல் தற்போது நாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட உள்ளது. இந்த கப்பல் ஏன் இவ்வளவு சிறப்பு என்று உங்களுக்கு தெரியுமா? ஏனெனில் மத்திய அரசு 2007ஆம் ஆண்டு உள்நாட்டிலேயே விமானந்தாங்கி போர்க் கப்பலை உருவாக்க முயற்சி செய்தது. இதன் காரணமாக முதல் முறையாக இந்தியாவில் இத்தகைய கப்பலை உருவாக்கும் முயற்சியில் இதற்கான பணியை கொச்சியில் உள்ள கட்டுமான நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டது. 20 கோடி ரூபாய் செலவில் கட்டமைக்கப்பட்ட இந்தக் கப்பல் தற்போது இறுதிகட்டப் பணியை எட்டியுள்ளது. 


ஐந்தாவது மற்றும் வெள்ளோட்டம் பார்ப்பதற்கான நிகழ்வுகளையும் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல் வெற்றிகரமாக கடந்து வந்துள்ளது. இதையடுத்து கடந்த மாதம் இருபத்தி எட்டாம் தேதி இந்தப் போர்க் கப்பல் கப்பல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த கப்பலில் குறிப்பாக, மிக்- 29 ஜெட்டுகள், காமோவ -31 ஹெலிகாப்டர்கள், M. H -60 வகையைச் சேர்ந்த விமானங்கள் இந்த கப்பலில் இணைக்கப் பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்தகைய பெரிய கப்பல்களை இயக்குவதற்கு, சுமார் எட்டு கொச்சி விமானங்களில் மிளிர வைப்பதற்கு சமமான எரிபொருள் தேவை படுகிறது. 


மேலும் உள்நாட்டிலேயே ஆத்ம நிற்பார் என்ற திட்டத்தின் கீழ் இந்த விக்ராந்த் விமானம் தாங்கி போர்க் போர்க்கப்பலை நாட்டுக்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் செப்டம்பர் 2-ஆம் தேதி அர்ப்பணிக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் கடற்படையைச் சேர்ந்த பல்வேறு கேப்டன்கள் மாலுமிகள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொள்ள உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Input & Image courtesy:Polimer

Tags:    

Similar News