சமஸ்கிருதம், வேதம் படிக்கும் கேரள முஸ்லிம் மாணவர்கள்: ஆர்வத்துடன் பங்கேற்க காரணம் என்ன?

Update: 2022-11-14 02:42 GMT

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள அகாடமி ஆப் ஷரியா மற்றும் அட்வான்ஸ்டு ஸ்டடிஸ் என்ற முஸ்லிம் கல்வி நிறுவனத்தில் படிக்கும் முஸ்லிம் மாணவர்களுக்கு சமஸ்கிருதம், ஸ்லோகங்கள் கற்றுத் தரப்படுகின்றன. சமஸ்கிருதத்தை கற்பதில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உபநிஷத், புராணங்கள் உள்ளிட்டவற்றுடன், ஹிந்து சமயம் குறித்த அடிப்படை விஷயங்களும் கற்றுத் தரப்படுகின்றன. இதற்கு மாணவர்கள், பெற்றோர், சமூகத்தினர் என எந்த தரப்பும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. உண்மையில், இந்த முயற்சியை பல்வேறு தரப்பினரும் பாராட்டுகின்றனர்.

கல்லூரி முதல்வர் கருத்து 

நான் சங்கரர் கோட்பாடுகள் குறித்து படித்துள்ளேன். இங்கு படிக்கும் மாணவர்களுக்கு, முஸ்லிம் மதத்தை தவிர மற்ற மதத்தில் உள்ளவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினோம். அதன்படி, 10ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு, அதற்கடுத்த எட்டு ஆண்டுகள், சமஸ்கிருதம், ஹிந்து மந்திரங்கள், ஸ்லோகங்கள் உள்ளிட்டவை கற்றுத் தரப்படுகின்றன என கல்வி மையத்தின் முதல்வர் ஓனம்பிலி முகமது பைசி கூறினார். 

பாராட்டு 

மொழிக்கு மதபேதம் கிடையாது. நிச்சயம் அனைவருக்கும் கற்றுத் தருகிறோம். மாணவர்கள் முதலில் சற்று கடினமாக உணர்ந்தாலும், மிகுந்த ஆர்வத்துடன் சமஸ்கிருதம் கற்பது பாராட்டக் கூடியது என கல்வி மைய முதல்வர் கூறினார். 

Input From: Dinamalar 

Similar News