மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 437.32புள்ளிகள் அதிகரித்து தொடங்கியது.
மும்பை பங்கு சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று மீண்டும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்செக்ஸ் 443 புள்ளிகள் அதிகரித்து 60,000 புள்ளிகளை தாண்டியும், நிஃப்டியும் 130 புள்ளிகள் அதிகரித்து 17,815 புள்ளிகளை தாண்டியும் வர்த்தகமாக ஆரம்பித்திருக்கிறது.
பட்ஜெட் அறிவிப்பில் முதலீட்டாளர்களுக்கு சாதகமாக அறிவிப்பு வரலாம் என்ற எதிர்பார்ப்பில் உயர்ந்து வருகிறது.