மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்ய உள்ள நிலையில், நிதியமைச்சகத்துக்கு வருகை தந்துள்ளார்.
2024 பொதுத் தேர்தலுக்கு முன் பாஜக அரசின் முழு பட்ஜெட் இதுவாகும். மத்திய நிதித் துறை இணையமைச்சர் பக்வத் கிருஷ்ணராவ் காரத் பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு சிறப்பு பூஜையில் ஈடுபட்டார்.
பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் தாக்கல் செய்தார்.