நம் பின்னால் அணி திரளும் உலக நாடுகள்: 20 நாடுகளின் தலைமைப் பொறுப்பு இந்தியா வசம் ஒப்படைப்பு!
ஜி-20 கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில், அடுத்த தலைமைப் பொறுப்பு முறைப்படி இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டது. ஜி-20 கூட்டமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதத்தையும், உலக மக்கள் தொகையில் 3-ல் இரண்டு பங்கையும் கொண்டுள்ளன.
அந்த வகையில் இது உலகிற்கான முக்கிய முடிவுகளை எடுக்கும் அமைப்பாக உள்ளது. இந்தக் கூட்டமைப்பின் தலைமை, அதன் உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்படுகிறது.
இந்தக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை கடந்த ஆண்டு ஏற்ற இந்தோனேஷியா, தற்போது தனது நாட்டின் பாலி தீவில் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டை நடத்தியது.
இதில், கூட்டமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டார்கள். உச்சி மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ, தலைமைப் பொறுப்பை ஒப்படைக்கும் நிகழ்வில் பங்கேற்று, பொறுப்பை பிரதமர் மோடி வசம் ஒப்படைத்தார்.
ஜி-20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றது. இந்த நிகழ்வில் உலகத் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Input From: HIndu