நக்சல் தீவிரவாதிகளின் ஆதிக்கம்
சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், உள்ளிட்ட மாநிலங்களில் நக்சல் தீவிரவாதிகளின் ஆதிக்கம் கணிசமாக குறைந்துள்ளது. டந்த 2013-ல் நக்சல் தீவிரவாதிகள் 1,136 தாக்குதல்களை நடத்தினர். கடந்த 2021-22-ம் ஆண்டில் அவர்களின் தாக்குதல் 509 ஆக குறைந்துள்ளது. இதன்படி கடந்த 8 ஆண்டுகளில் 55% அளவுக்கு நக்சல் தீவிரவாதம் குறைந்திருக்கிறது என மத்திய உள்துறை அமைச்சகம் கூறியது.
மத்திய அரசின் நடவடிக்கை
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக இது சாத்தியமானது. கடந்த 2013-ல்நக்சல் தீவிரவாதிகளின் தாக்குதலில் 397 பேர் உயிரிழந்தனர். கடந்த 2021-22-ல் 147 பேர் உயிரிழந்தனர். இதன்படி கடந்த 8 ஆண்டுகளில் உயிரிழப்பு 63% குறைந்திருக்கிறது என உள்துறை அமைச்சகம் கூறியது.
மாவட்டங்கள் குறைவு
நக்சல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பட்டியல் கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு முறை திருத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 2018 இல் 90 ஆகவும் பின்னர் ஜூலை 2021ல் 70 ஆகவும் குறைக்கப்பட்டது. நக்சல் வன்முறையில் 90 சதவிகிதம் வெறும் 25 மாவட்டங்களில் இருப்பதால் வன்முறையின் வளைவு கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அறிக்கை கூறுகிறது.
Input From: Deccanherald