நீர் மற்றும் நிலம் இரண்டிலும் தரையிறங்கும் 14 நீர் சார்ந்த விமான நிலையங்களை உருவாக்க மத்திய அரசு முடிவு.!
நீர் மற்றும் நிலம் இரண்டிலும் தரையிறங்கும் 14 நீர் சார்ந்த விமான நிலையங்களை உருவாக்க மத்திய அரசு முடிவு.!
பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் முதல் கடல் விமான சேவையை சில தினங்களுக்கு முன்பாக குஜராத்தில் உள்ள படேல் சிலை அருகே நர்மதா ஆற்றில் தொடங்கி வைத்தார். இது இந்தியாவின் முதல் கடல் விமான சேவையாகும். பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த இந்தியாவின் முதல் கடல் விமான சேவை அகமதாபாத்தில் உள்ள சாபர்மதி ஆற்றங்கரையில், நர்மதா மாவட்டத்தில் உள்ள கெவடியாவில் அமைந்துள்ள ஸ்டாச்யூ ஆஃப் யூனிட்டியை இது இணைக்கிறது.
சர்தார் பல்லபாய் படேலின் பிறந்த தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கெவாடியா சபர்மதி சீப்ளேன் சேவையைத் தொடங்கினார். நிகழ்ச்சிக்குப் பிறகு பிரதமர் மோடியே கெவடியாவிலிருந்து அகமதாபாத்வரை கடல் விமானம் வழியாக பயணம் செய்தார். இந்த கடல் விமானத்தின் சிறப்பு என்னவென்றால், அது தண்ணீர் மற்றும் நிலம் இரண்டிலிருந்தும் பறக்க முடியும்.
இதன் மூலம், நீர் மற்றும் நிலம் இரண்டிலும் தரையிறக்கவும் செய்யலாம். கடல் விமானம் பறக்க ஓடு பாதை தேவையில்லை, மேலும் அது எந்த நீர்த்தேக்கத்தையும் ஓடு பாதையாக பயன்படுத்திக் கொண்டு பறக்க முடியும். 19 பயணிகள் ஒரே நேரத்தில் கடல் விமானத்தில் பயணிக்க முடியும். இந்நிலையில், நாடு முழுவதும் கடல் விமான சேவைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் விரிவாக செயல்பட்டு வருகிறது.
தற்போது மத்திய அரசு புதிதாக எடுத்த முடிவுப்படி மேலும் 14 நீர் சார்ந்த விமான நிலையங்களை உருவாக்க அரசு தீர்மானித்துள்ளது. நாட்டில் சுற்றுலாத் துறையில் வளர்ச்சி காணும் வகையில் இதுபோன்ற சேவைகளை மேலும் மேம்படுத்த அரசாங்கம் இப்போது முடிவு செய்துள்ளது.
இது குறித்த தகவல்களை வழங்கிய, கப்பல் அமைச்சகத்தின் அதிகாரிகள் பிராந்திய விமான இணைப்பு விமான திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இதுபோன்ற 14 நீர் சார்ந்த நிலையஙக்ளை கட்டமைக்க வேண்டும் என்று அரசு திட்டமிட்டுள்ளதாக கூறினார். இந்திய விமான நிலைய ஆணையமும், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகமும் இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையத்திடமும், இது தொடர்பான பொருத்தமான இடங்கள் குறித்த தகவல்களை சேகரிக்குமாறு கூறப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் கூறினர்.