தீபாவளி நற்செய்தி: ஜன் தன் வங்கி கணக்கில் பெண்களுக்கு மீண்டும் ரூ.1500 செலுத்த மத்திய அரசு தீவிர பரிசீலனை.!
தீபாவளி நற்செய்தி: ஜன் தன் வங்கி கணக்கில் பெண்களுக்கு மீண்டும் ரூ.1500 செலுத்த மத்திய அரசு தீவிர பரிசீலனை.!
ஏழை மக்களுக்கும், இதுவரை வங்கி வாசலையே மிதிக்காதவர்களுக்கும் வங்கிகள் மூலம் நேரடி பயன் வழங்குவதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜன்தன் வங்கிக் கணக்கு திட்டத்தை கொண்டு வந்தார். இதன் மூலம் கிராம மக்களுக்கான 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஊதியம் எந்த வித இடைத்தரகர்கள் பிடித்தமும் இன்றி நேரடியாக செல்கிறது. விவசாயிகளுக்கு பல மானியங்களும், கிஸான் உதவி திட்ட பணமும் இந்த கணக்குகள் மூலம் அரசால் நேரடியாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் ஏழை மக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு கரிஃப் கல்யாண் அண்ணா யோஜனா என்ற திட்டம் மூலம் 80 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு ஜூன் மாதம் வரையிலான உணவு தானியங்களை இலவசமாக வழங்குவதாக அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது, பின்ன், இது பின்னர் பண்டிகை காலங்களை முன்னிட்டு, நவம்பர் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டது.
மேலும் ஏழை பெண்களுக்கு நாடு முழுவதும் இலவச எரிவாயு சிலிண்டர்கள் கிட்டத்தட்ட 30 கோடி சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் பெண்கள் பெயருள்ள ஜன்தன் வங்கிக் கணக்கில் கொரோனா பாதிப்பு காலங்களில் தொடர்ந்து 3 மாதங்களுக்கு மாதம் ரூ.500 செலுத்தப்பட்டது. இந்நிலையில், பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்ட பெண் பயனாளிகளுக்கு தீபாவளி போனஸாக ரூ.1500 வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டம் என்பது மத்திய அரசின் கரிஃப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த திட்டத்தின் மூலம் ஜன் தன் வங்கி கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு மத்திய அரசு பல்வேறு வகையில் நிதி உதவி அளித்து வருகிறது. இப்போது, ஜன்தன் யோஜனா திட்ட பெண் பயனாளிகள் தீபாவளிக்கு முன்பு ஒரு சிறப்பு பரிசைப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, 1500 ரூபாயை மீண்டும் ஜன் தன் கணக்கு வைத்திருக்கும் பெண் பயனாளிகளுக்கு வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்ய உததேசித்துள்ளதாக கூறபபடுகிறது.