அசாம் - மிசோரம் எல்லையில் மோதல் : 20 குடிசைகளுக்குத் தீவைப்பு.!
அசாம் - மிசோரம் எல்லையில் மோதல் : 20 குடிசைகளுக்குத் தீவைப்பு.!
சனிக்கிழமை இரவு அசாம்- மிசோரம் இரு மாநிலங்களின் எல்லைப் பகுதியில் இரு மாநிலங்களின் மக்களுக்கு இடையே தாக்குதல் ஏற்பட்டுள்ளது. அதில் காயமடைந்த மக்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்ட 20 குடிசைகளை எரித்துள்ளனர். இதில் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அசாம் சச்சார் மாவட்டத்தில் லைலாப்பூர் கிராம மக்களுக்கு மிசோரம் கோலாசிப் மாவட்டத்தில் வைரெங்டே பகுதியில் வசிப்பவர்களுக்கும் இடையே ஏற்பட்ட சர்ச்சையினால் இந்த மோதல் நடந்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல் விளைவாக சைஹைபுய் கிராமத்திற்கு அருகே உள்ள எல்லைப்பகுதியில் உள்ளூர் தன்னார்வலர்களால் அமைக்கப்பட்ட குடிசைகள் இடிக்கப்பட்டுள்ளது.
கோலாசிப் மாவட்டத்தின் துணை காவல் கண்காணிப்பாளர் H லலிதளங்களினா, சனிக்கிழமை மாலை அசாம் மக்கள் சிலர் கையில் குச்சிகள், கற்களுடன் கிராம எல்லைக்குள் வந்தால் வைரெங்டே மக்கள் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் வைரெங்டே கும்பல்கள் லைலாப்பூர் பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட 20 குடிசைகளையும் மற்றும் நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்ட ஸ்டால்களையும் எரித்துள்ளனர்.
இருப்பினும் மிசோரத்தின் MNF MLA லால்ரிண்ட்லுவாங்க சைலோ, எல்லைப்பகுதியில் குடியேறிய பங்காளதேசிகளிடம் இருந்து தனது மாநிலத்தை மட்டும் பாதுகாப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் அசாம்-மிசோரம் பகுதியில் குடியேறியவர்களில் 80 சதவீதம் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் மிசோரம் அமைச்சரவை, "எல்லைப் பகுதியின் மூன்று இடங்களில் அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் நடைபெற்ற தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது". மேலும் "தனிப்பட்ட விரோதங்கள் மற்றும் தாக்குதல்களைப் பயன்படுத்த வேண்டாமென்று மிசோரம் அரசாங்கம் அனைத்து நபர்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது."
"தற்காலிக குடிசைகள் எரிக்கப்பட்ட செய்தி எங்களுக்கு நேற்று இரவு கிடைத்தது.தாக்குதல்கள் நடந்த இடத்துக்கு காவல்துறை விரைந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும் பாதுகாப்படையினரும் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர். மிசோரம் தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம்," என்று சச்சார் SP பன்வர் லால் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அசாம் முதல்வர் சர்பானந்த் சோனோவால் மத்திய உள்துறை அமைச்சரிடம் பேசியுள்ளார்.