பிரதமரை கவர்ந்த சிறுமி வைத்திருந்த ஓவியம் - பாதுகாப்பு வளையங்களையும் மீறி சிறுமியின் பரிசை ஏற்றுக்கொண்டார்
குஜராத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மூன்று நாள் பிரதமர் மோடி அங்கு பிரச்சாரம் செய்யவிருக்கிறார்.;
குஜராத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மூன்று நாள் பிரதமர் மோடி அங்கு பிரச்சாரம் செய்யவிருக்கிறார்.
நேற்று வலசாத் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி குஜராத்தை குறை கூறியவர்களுக்கு ஆட்சியில் இடமில்லை என வாக்காளர்களுக்கு வலியுறுத்தி பா.ஜ.க'விற்கு வாக்கு சேகரித்தார்.
சாலையில் பேரணியாக சென்ற மோடிக்கு மக்கள் பெரும் திரளாக வந்து ஆதரவை வெளிப்படுத்தினர். அப்போது 13 வயது சிறுமி ஒருவர் மோடியின் சித்திரத்தை கையில் வைத்திருந்ததை கவனித்த பிரதமர் மோடி உதவியாளர்களை அனுப்பி என்ற அந்த சிறுமி அவர்களிடமிருந்து அந்த ஓவியத்தை பெற்றுக்கொண்டார்.