உலகமே பார்த்து பிரம்மிக்கும் ஏர்பஸ் விமானங்கள் இந்தியாவில் உருவாகப்போகிறது - பிரதமரின் மாஸ்டர் பிளான்!
குஜராத்தில் ஆலை
ஏர்பஸ் சி295 ரக விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளது. முதன் முறையாக ஐரோப்பாவுக்கு வெளியே இந்தியாவில் மட்டுமே தயாராக உள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவில் ஆலை அமைக்கப்படவுள்ளது.
ஏர்பஸ் சி295 போக்குவரத்து விமான தயாரிப்பு ஆலையை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா அக்டோபர் 30-ம் தேதி நடைபெறவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
ஏர்பஸ் ஒப்பந்தம்
இந்தியாவில் ராணுவ விமானங்களைத் தயாரிக்கும் திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படையின் பழைய அவ்ரோ-748 விமானங்களுக்குப் பதிலாக சி295 ரக விமானம் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக 56 போக்குவரத்து விமானங்களை வாங்குவதற்கான ரூ.21,000கோடி ஒப்பந்தம் ஏர்பஸ் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டது. ஒப்பந்தத்தின்படி, ஏர்பஸ் நிறுவனம் சி295 ரக 40 விமானங்களை டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம்ஸ் உடன் இணைந்து இந்தியாவில் தயாரிக்கும். எஞ்சிய 16 விமானங்கள் ஸ்பெயின் நாட்டில் உள்ள செவிலி ஆலையில் 4 ஆண்டுகளில் தயாரித்து இந்தியாவிடம் அளிக்கப்படவுள்ளது.
Input From: Hindu