கிறிஸ்த்துவ மத மாற்றத்தை கண்காணிக்க அதிரடி உத்தரவு பிறப்பித்த அமித்ஷா - பின்னணி என்ன?
ஒவ்வொரு மாநிலத்திலும் 100 சட்ட விரோதமாக புலம் பெயர்ந்தவர்களை அடையாளம் கண்ட நாடு கடத்த வேண்டும் என அமித்ஷா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.;
ஒவ்வொரு மாநிலத்திலும் 100 சட்ட விரோதமாக புலம் பெயர்ந்தவர்களை அடையாளம் கண்ட நாடு கடத்த வேண்டும் என அமித்ஷா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புது டெல்லியில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தலை கண்காணிக்கும் பணியில் மத்திய புலனாய்வு அமைப்பு ஈடுபட்டு வருகிறது, டெல்லியில் ரகசிய இடத்தில் நாடு முழுவதும் உளவுத்துறை அதிகாரிகளின் உயர்நிலைக் கூட்டம் மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஒன்பதாம் தேதி நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சட்டவிரோத புலம்பெயர் நபர்களை 100 பேர் அடையாளம் கண்டவர்களை கைது செய்து பின்பு நாடு கடத்த வேண்டும், அவர்களிடம் ஆவணங்கள் இல்லாத புலம்பெயர்வோர் என்பதற்காக அண்டை நாடுகள் ஏற்க மறுத்த போதிலும் இந்த பணியை மேற்கொள்ளுங்கள் என உளவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புக்கு முக்கிய சவால்கள் ஒன்றாக உள்ள ஆவணம் இல்லாமல் எல்லை மாநிலங்களில் புலம்பெயர் நபர்கள் மீது அமித்ஷா கடுமையை காட்டுவது இது முதல் முறை அல்ல. சீக்கியர்கள் கிறிஸ்தவ மத மாற்றத்திற்கு ஆளாவது அதிகரிப்பது பற்றியும் கண்காணிக்கும்படி ஒன்பதாம் தேதி நடந்த கூட்டத்தில் அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.