பருப்பு, வெங்காயம் விலை உயர வாய்ப்பே தற்பொழுது இல்லை - கெத்து காட்டும் மத்திய அரசின் நிர்வாகம்
பருப்பு, வெங்காயம் விலை உயர வாய்ப்பு இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
பருப்பு, வெங்காயம் விலை உயர வாய்ப்பு இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
புது டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நுகர்வோர் விவாகரத்துறை செயலாளர் ரோகித் குமார் சிங் கூறுகையில் நாட்டில் வெங்காயம் மற்றும் பருப்பு போதுமான அளவு கையிருப்பு உள்ளதாக தெரிவித்தார். மேலும் விலை நிறுவனத்தை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் 43 லட்சம் டன் பருப்பு, இரண்டரை லட்சம் டன் வெங்காயமும் கையிருப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களுக்கு பயன்படுத்துவதற்காக தள்ளுபடி விலையில் இந்த பருப்பு வகைகளை வழங்கி வழங்குகிறது எனவும் நுகர்வோர் விவாகரத்துறை செயலாளர் ரோகித் குமார் கூறினர். எனவே தற்போது பருப்பு மற்றும் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு வர வாய்ப்பே இல்லை எனவும் தெரிவித்தார்.