இதற்கு பதில் அளித்த முதல்வர் திரிணாமுல் காங்கிரஸின் செய்தி தொடர்பாளர், ஆளுநர் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதாகவும், தன்னுடைய வரம்புகளை மீறுகிறார் என்றும் யாராவது காவலில் இறந்துவிட்டார் அதை கவனித்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றமும் நிர்வாகமும் இருக்கிறது என்றார். இதற்கிடையில் காவல்துறையினரால் சித்திரவதை செய்யப்பட்டதால் தங்கள் தொண்டர் இறந்துவிட்டதாக பா.ஜ.க குற்றம் சுமத்தியுள்ளது.
சமீப காலமாக இத்தகைய மூர்க்கத்தனமான கொலைகள் அதிரிப்பதும் அவை தற்கொலை போல காட்டப்படுவதும் நடந்து வருகிறது. விசாரணை என்று அழைத்து சென்று போலீஸ் கஸ்டடியில் மரணம் நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது. மிகவும் வெளிப்டையாகப் பேசும் தன்மையுள்ள ஆளுநர், மாநில காவல் தலைமை மீது "அரசியல் எதிராளிகள் மீது தீவிரவாதத்தை கட்டவிழ்த்து விடுவதாக" கடும் குற்றம் சாட்டி வருகிறார்.
தேய்ந்து வரும் சட்ட ஒழுங்கு நிலைமையைப் பற்றியும், மாநிலத்தில் அதிகரித்து வரும் அரசியல் வன்முறை, மனித உரிமை மீறல்கள் மற்றும் அரசியல் எதிராளிகளை குறிவைப்பது ஆகிய விவகாரங்களில் மேற்கு வங்க காவல் துறையை விமர்சித்து, ஒரு ரகசியமான கடிதத்தை செப்டம்பர் ஐந்தாம் தேதி மேற்கு வங்க டிஜிபிக்கு மேற்கு வங்க ஆளுநர் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பாகுபாடு காட்டி நடந்துகொள்வதாக போலீசார் மீது குற்றம் சுமத்தி இருந்தார். விவகாரங்களை சரிபார்த்து சட்டத்தின் ஆட்சியை நிறுவுமாறு கேட்டுக்கொண்டார்.
இந்தக் கடிதத்திற்கு செப்டம்பர் பத்தாம் தேதி அன்று டிஜிபி வெறும் இரண்டு வரியில் பதிலளித்துள்ளார். மேற்கு வங்காள காவல்துறை சட்டத்தை பின்பற்றுவதாகவும், சட்ட வாயிலாக யாரையும் எதிர்த்து எந்தப் பாகுபாடும் காட்டப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆளுநர், டிஜிபியின் பதிலை கேட்டு ஆச்சரியமும் துன்பம் அடைவதாகவும் அவர் பேச்சை யாரும் நம்ப மாட்டார்கள் என்றும் உண்மை அவர் கூறுவதிலிருந்து மிகவும் தொலைவில் இருப்பதாகவும் ஆளுநர் பதில் தெரிவித்தார்.
மேற்கு வங்க மாநிலம் தீவிரவாதம், குற்றம், சட்டத்திற்குப் புறம்பாக வெடிகுண்டு தயாரிப்பது, ஊழல் என்பதன் காரணமாக மனித உரிமைகள் மீறப்படுவது, எதிர்க்கட்சிகளை அடக்குவது என பல விஷயங்களுக்கு பாதுகாப்பான இடமாக இருப்பதாக கவர்னர் டிஜிபிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார். அரசியல் பழிவாங்கும் உணர்ச்சியில் போலிசார் செயல்படுவதாகவும், அரசியல் படுகொலைகள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
மனித உரிமை மீறல்களுக்கு பெங்கால் போலீசார் காரணமாக இருப்பதாகவும் அதிகாரி அரசியலமைப்பிற்கு புறம்பாக அதிகாரத்தில் இருப்பவர்களிடம் அடிமை வேலை செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆளும் கட்சி வைத்திருக்கும் அடியாள்களுக்கு ஆதரவு அளித்து, எதிர்க்கட்சி எம்பி, எம்எல்ஏ, தொண்டர்களுக்கு எதிராக கொலைகார தாக்குதல்களை நடத்துவதாகவும் குற்றம் சுமத்தினார்.
மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கு காவல்துறையின் நடுநிலையை காப்பாற்றுமாறு தான் அனுப்பிய எச்சரிக்கைகள் அனைத்தும் கேட்கப்படாமல் போனதாகவும் தங்கள் செய்வதற்கு விளைவுகள் இருக்காது என்று நம்புவதாலாயே இவ்வாறு நடந்து கொள்வதாகவும் கூறினார். எந்த நடவடிக்கையும் வராது என்ற தவறான கருத்தில் இருந்தால் மிகவும் அதிர்ச்சியை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்றும் சட்டத்தின் கோபம் கூடிய விரைவில் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்தார்.
செப்டம்பர் 26ம் தேதிக்குள் டிஜிபி தன்னை நேரில் சந்திக்க வேண்டும் என்றும் காவல்துறை தன் நடுநிலைமையை காப்பாற்றி நாட்டில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இத்தகைய எச்சரிக்கைகள் மாநில காவல்துறை தலைமையகத்தில் பெரும் சர்ச்சையை எழுப்பியது. தற்போது பணியாற்றி வரும் மற்றும் ஓய்வு பெற்றுள்ள போலீஸ் அதிகாரிகள் கவர்னரிடம் இருந்து இப்படி ஒரு கடிதம் மேற்கு வங்காள வரலாற்றில் நடந்தது இல்லை என்று தெரிவித்துள்ளனர்.