ராகுல் காந்தி பங்கேற்ற விழாவில் நேபாள நாட்டு தேசிய கீதம்: தேச விரோத செயல்களில் ஈடுபடுகிறாரா?

Update: 2022-11-18 03:17 GMT

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, விலைவாசி உயர்வு விவகாரத்தில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.

பிரதமர் மோடி கருப்பு பணத்திற்கு எதிராக போராடுவதாக கூறினார். தொலைக்காட்சியில் வந்து நோட்டு தடையை அறிவித்தார். நோட்டு தடை மற்றும் தவறான ஜிஎஸ்டி கொள்கைகள் அனைத்தும் சிறு மற்றும் நடுத்தர தொழில்களை அழிப்பதற்காகும் என பேசினார்.

நிகழ்ச்சியின் நிறைவில் தேசிய கீதம் பாடல் ஒலிக்கயிருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அனைவரும் எழுந்து நின்று ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என விதத்தில் , தேசிய கீதம் ஒலிபரப்பப்படும் என்றார் ராகுல் காந்தி.

அப்போது 'ஜனகன மன' பாடலுக்கு பதிலாக நேபாள நாட்டு தேசிய கீதம் சில நிமிடங்கள் ஓடியது. தவறை உணர்ந்த பிறகு தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது.

Similar News