ஆறு மாநிலங்களில் உள்ள ஏழு தொகுதி இடைத்தேர்தல் - அமோக வெற்றிபெற்ற பா.ஜ.க

ஆறு மாநிலங்களில் உள்ள ஏழு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்றுள்ளது.

Update: 2022-11-06 13:18 GMT

ஆறு மாநிலங்களில் உள்ள ஏழு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்றுள்ளது.

தெலுங்கானா உட்பட ஆறு மாநிலங்களில் காலியாக இருந்த ஏழு சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த நான்காம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில் அதிகபட்சமாக தெலுங்கானாவின் முணுகோட் தொகுதியில் 77.57 சதவிகிதமும், மிகக் குறைவாக மகாராஷ்டிராவின் கிழக்கு அந்தேரியில் 31.74 சதவீதமும் வாக்குகள் பதிவான.

இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று நடைபெற்றது. அதில் உத்தரபிரதேசம் கோகர்நாத் தொகுதியில் பா.ஜ.க வெற்றி பெற்றது. ஹரியானாவின் ஆதம்பூர் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் வெற்றி பெற்றார். பீகாரின் கோபால் கஞ்சி தொகுதியில் 2000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று பா.ஜ.க தக்க வைத்துக் கொண்டது. பீகாரின் மேகமா தொகுதியில் ஆளும் ராஜேஷ் ஜனதா தளத்தின் நீலம் தேவி வெற்றி பெற்றார். தெலுங்கானாவின் முணுகோட் தொகுதியில் ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி முன்னிலையில் உள்ளது அதன் வெற்றி விபரம் விரைவில் தெரியவரும்.


Source - Dinamalar

Similar News